Friday, 28 July 2017

நன்றி : நியூட்டன் அறிவியல் மன்றம்.

நீட் தேர்வு பற்றிய தவறான புரிதல் நம்மில் பலருக்கு உள்ளது. மேலும் நீட் தேர்வு பற்றி தவறான கருத்துகள் பலரால் தங்கள் சுயநலத்திற்காக தமிழகத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.

நீட்தேர்வு பற்றிய ஒரு சில கேள்விகளுக்கு பதில்கள்.

கேள்வி :  நீட்தேர்வால் ஏழை எளிய கிராமபுற மாணவர்கள் பாதிப்படைகிறார்களா?

பதில்: கிடையாது. மாறாக ஏழை எளிய கிராம்புற மாணவர்கள் பயனடைகின்றனர்.

கேள்வி: நீட் தேர்வால் யார் பயனடைகின்றனர்?

பதில் :  1.  ஏழை எளிய கிராம்புற மாணவர்கள்.
2.மீத்திறன்மிக்க அரசு பள்ளி மாணவர்கள்.
3.திறமையின்மேல் நம்பிக்கை உடைய அனைவரும்.

கேள்வி : நீட் தேர்வால் ஏழை எளிய கிராம்புற மாணவர்கள் எவ்வகையில் பயனடைகின்றனர்?

பதில் :  மருத்துவ கனவுடன் உள்ள மீத்திறன்மிக்க ஏழை மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் நீட் தேர்வில் வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது. ( உதாரணமாக  TNPSC  மற்றும் TRB போல் )

கேள்வி : நீட்தேர்வால் பாதிப்படைவது யார்?

பதில் :1. குறைந்த மதிப்பெண் பெறும் பணக்கார வீட்டு குழந்தைகள்.
2.பணத்தின் மேல் நம்பிக்கை உடையவர்கள் அனைவரும்.

கேள்வி : நீட்தேர்வை எதிர்ப்பவர்கள் யார்?

பதில் : 1.ஒரு சில தனியார் பள்ளிகள்
2. தனியார் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள்,நிகர்நிலைப் பல்கலைக்கழக கல்வித்தந்தைகள்.
3.இவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அரசியல் வாதிகள்.

கேள்வி : இவர்கள் எதிர்க்க காரணம் என்ன?

பதில் : ஒரு சில தனியார் பள்ளிகள்   11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை கட்டணம் வசூல்செய்கின்றனர் . மேலும் 11 ஆம்வகுப்புக்குரிய பாடத்தை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் 12 வகுப்புக்குரிய பாடத்தையே நடத்துகின்றனர் .மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ஒரு இடத்திற்கு 50 இலட்சத்திற்கு மேல் கட்டணம் வசூல் செய்கின்றனர் .நீட் தேர்வால் இந்த கட்டண கொள்ளை பாதிக்கப்படும் என்பதே காரணம்.

*********


நீட் தேர்வு என்றால் என்ன அது குறித்த உண்மைகளும் விளக்கங்களும. இதற்கு மேலும் புரியவில்லையா, Please go for RTI.

1) நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான் (qualifying test). அஃது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

2) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப் படும்.
தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG) நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே  நிரப்பப் படும்.

3) மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும்  வழங்கப்படும். இஃது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இது அப்படியே தொடரும்.

4) நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்விதமாற்றமும் இன்றி நீடிக்கிறது.

5) தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.இஃதும் அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.

6) குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும் கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய் கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.

7) மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்காற்றை ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of NEET is to regulate the seat allotment).

8) எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடுமுதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில் எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள் நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.

9) நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும். அவ்வளவுதான்.

10) தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக் கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங் கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

நன்றி : நியூட்டன் அறிவியல் மன்றம்.

No comments:

Post a Comment